பெண்கள் ஏன் கட்டாயம் கண்ணாடி வளையல் அணிய வேண்டும்
1) தீய சக்திகளை விரட்டியடித்து பெண் தேவதையின் அருளை ஈர்க்கும் சக்தி இந்த கண்ணாடி வளையலில் உண்டு.
2) தொடர்ந்து அவர்கள் வளையல்கள் ஓசை எழுப்புவது கருவில் இருக்கும் குழந்தைகளின் கேட்கும் திறனை அதிகரிக்கிறது.
3) பச்சை நிற வளையல்கள் அணிவது சிறப்பானது. இந்நிறத்தில் அணிவதால் மன நிம்மதி, மகிழ்ச்சி கிடைக்கும். சிவப்பு நிற வளையல் தீ சக்திகளை விரட்ட வல்லது. காப்பு சக்திகளை அதிகம் கிரகிக்கக்கூடிய ஆற்றல் இந்நிறத்திற்கு உண்டு. சிகினா வேலைப்பாடுகள் கொண்ட வளையல்கள் இதுபோன்ற காப்பு சக்திகளை ஈர்க்காது என்பதால் அவற்றை தவிர்ப்பது நன்று. தென்னிந்தியாவில் கர்நாடகா , மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பொதுவாக பச்சை நிறத்தை அதிகம் அணிவர். வடக்கில் பஞ்சாப் , உ.பி , போன்ற மாநிலங்களில் சிவப்பு நிறத்தை அதிகமாக பயன் படுத்துவர். பச்சை நிறம் பொதுவாக இறைத்தன்மை மற்றும் சமாதானத்தை பறை சாற்றும் . சிவப்பு நிறம் தீயவற்றை அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும். இந்த நிற வளையல்கள் மீது தங்க நிற வேலைப்பாடு அமைந்திருக்கும் போது மேற்கூறிய ஆற்றல்கள் வெளிப்படாமல் போவதாக கூறப்படுகிறது. ஆகையால் வேறு எந்த நிறமும் கலக்காமல் சிவப்பு மற்றும் பச்சை நிற வளையல்களை அணிவது சிறந்த பலனை கொடுக்கும்.
4) வீட்டில் நேர்மறை ஆற்றல் ஏற்படுவதற்கு கடைகளில் விற்கும், ஒலியெழுப்பும் கருவிகளை வாங்கி தொங்க விடுகிறார்கள். பெண்கள் கண்ணாடி வளையலை அணிந்து கொண்டால் இந்த செயற்கையான ஒலியெழுப்பும் கருவிகள் நம் வீட்டிற்கு தேவைப்படாது.
5) உடைந்த கண்ணாடி வளையல்களை பெண்கள் அணிந்து கொள்ளக் கூடாது. அந்த உடைந்த விரிசலின் மூலம் கெட்ட சக்திகள் ஊடுருவும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் கண்ணாடி வளையல்கள் எதிர்பாராமல் உடைந்துவிட்டால் அதற்கு எந்தக் கெட்ட சகுணமும் இல்லை. உங்களுக்கும், உங்கள் வீட்டிற்கும் இருந்த பெரிய கண்திருஷ்டியானது மறைந்து விட்டது என்றுதான் அர்த்தம்.
------வணக்கம் ------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Don't do the contents copy those all the one are taken copyright. So becareful.